உ
ஜெய் ஸ்ரீராம்!
நின்னைக் காணக் கண் கோடி வேண்டும், இறையே! இப்பிறவியிலேயே, எனது இரு கண்களால் நின் அழகு அலங்கார தரிசனம் காணக் கிடைத்திருப்பது என் பாக்கியமே!
Lord Sri Baktha Varaprasada Anjaneyar Swamy in various pleasant decorations.
நின்னைக் கண்டு கரம் குவிக்கும் இதயங்கள் மலர்ந்திடும், நின்னை அலங்கரிக்கும் கரங்கள் சிறந்திடும், நீர் காணும் எதுவும் உயர்ந்திடும்!
நின்நின் கைகளில் மலர்ச்சரமாவது எத்தகைய வரம்!
![]() |
| Sri Anjaneyar Ji with glittering grace |
நின்னைத் தழுவும் ஆடையின் நூலாக அடுத்த பிறவி கிடைக்குமோ?
![]() |
| Sri Anjaneyar Ji in Tamil Dhoties |
மங்கையர் நெற்றித் திலகம் நின் உடல் முழுதிலும் பட திரேதா யுகம் வரை தவம் இருந்ததோ!
![]() |
| Sri Anjaneyar Ji in Senthura Kappu |
முத்துப் பிள்ளைக்கு முத்தங்கி சேவை!
![]() |
| Sri Anjaneyar Ji in Muthangi Alankaram |
இயற்கையை நேசிக்கக் கற்றுத் தருகிறீரா!
![]() |
| Sri Anjaneyar Ji in Iyarkai Alankaram |
மானிடனாய் பிறந்து என்ன பயன்- நின்னை அலங்கரிக்கும் ஆபரணங்களுக்கு முன்னே!
![]() |
| Sri Anjaneyar Ji in Senthura Kappu |
வெண்ணையில் நின் அழகு கண்ட பிந்தான் கண்ணனுக்கும் அதன் மேல் ஆசை வந்ததோ!
![]() |
| Sri Anjaneyar Ji in Vennai Kappu |
எச்செடியில் மலராய் பிறந்தேனும் நின் அடி சேர்வதயே தவமாய் கொள்ளவோ!
![]() |
| Sri Anjaneyar Ji in Pushpa Alankaram |
முக்காலத்துக்கும் துணை நிற்பதாய் சொல்கிறதோ இந்த வெண்ணையும், செந்தூரமும், முத்தங்கியும்!
![]() |
| Sri Hanuman Ji in Senthura Kappu |
உலகனைத்திலும் உயர்ந்தவர் நீர், தங்கத்திலும் மேலானவர் நீர்! எங்களுக்கு இந்த உலோகத்திலும் மேலானது தெரியவில்லையே, நின்னை அலங்கரிக்க!
![]() |
| Sri Hanuman Ji with Thanga Kavasam |
வெள்ளி அலங்காரம் செய்தோம், எங்கள் வாழ்வின் விடிவெள்ளி நீரென்று அறிந்து!
![]() |
| Sri Hanuman Ji with Silver armour |
வடை போல் அடித்தாய் அரக்கரை போர்க்களத்தில், தீய எண்ணங்களை அடித்து நீக்கிடு எங்கள் வாழ்வில்!
![]() | ||
| Sri Anjaneyar Ji with Vada Malai decoration |












No comments:
Post a Comment