Featured post

The Eleventh Rudra Incarnation of Merciful Lord Siva

Saturday, 26 March 2016

Hanuman Kavasam



ஜெய் ஹனுமான்! ஜெய் ஸ்ரீ ராம் !

JAI HANUMAN !  JAI SRI RAM !






ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்

(இதைப் படிப்பதால் ஸ்ரீராமரின் பரிபூரண அநுக்ரஹம் உண்டாகும்)

அஸ்ய ஸ்ரீஹநுமத் கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய l ஸ்ரீராமசந்த்ர ருஷி: l காயத்ரீச்சந்த: l ஸ்ரீஹநுமான் பரமாத்மா தேவதா l  மாருதாத்மஜ இதி பீஜம் l அஞ்சநாஸுநுரிதி சக்தி: l ஸ்ரீராமதூத இதி கீலகம் l மம மநஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே விநியோக: ll

ஸ்ரீராமசந்த்ர உவாச

ஹநுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவநாத்மஜ:l
ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ந: ஸௌம்யாம் ஸாகரதாரண: ll

ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்து மேஹ்யத: l
லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் ll

ஸுக்ரீவஸசிவ: பாது மஸ்தகே வாயுநநதன: l
பாலம் பாது மஹா வீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம் ll

நேத்ரே சாயாபஹாரீச பாதுமாம் ப்லவகேச்வர: l
கபோலௌ கர்ணமூலேது பாது மே ராமகிங்கர: ll

நாஸாயாமஞ்ஜநாஸுநு: பாது வக்த்ரம் ஹரீச்வர: l
பாது கண்டஞ்ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: ll

புஜௌ பாது மஹா தேஜா: கரௌது சரணாயுத: l
நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்வர: ll

வக்ஷோ முத்ராபஹாரீச பாது பார்ச்வே மஹாபுஜ: l
ஸீதா சோகப்ரஹர்தாச ஸ்தநௌ பாது நிரந்தரம் ll

லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே நிரந்தரம் l
நாபிம் ஸ்ரீராமசந்த்ரோ மே கடிம் பாது ஸமீரஜ: ll

குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்யிநீ ச சிவப்ரிய: l
ஊரூச ஜாநுநீ பாது லங்கா ப்ராஸாத பஞ்ஜந: ll

ஜங்கே பாது கபிச்ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல: l
அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸந்நிப: ll

அங்காந்யமித ஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா l
ஸர்வாங்காநி மஹாசூர: பாது ரோமாணிசாத்மவான் ll

ஹநூமத் கவசம் யஸ்து படேத் வித்வாந் விசக்ஷண: l
ஸ ஏவ புருஷச்ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி ll

த்ரிகாலமேககாலம்வா படேன் மாஸத்ரயம் நர: l
ஸர்வாந் ரிபூந் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமாந் ச்ரியமாப்நுயாத் ll

அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத் யதி l
க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம் ll

அச்வத்தமூலேர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான் l
அசலாம் ச்ரியமாப்நோதி ஸங்க்ராமே விஜயீபவேத் ll

ஸர்வாரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்தி ப்ரதாயகம் l
ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமந்விதம் ll

ராமரக்ஷாம் படேத்யஸ்து ஹநுமத் கவசம் விநா l
அரண்யே ருதிதம் தேந் ஸ்தோத்ர பாடஞ்ச நிஷ்பலம் ll

ஸர்வது:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் l
அஹோராத்ரம் படேத் யஸ்து சுசி: ப்ரயதமாநஸ: ll

முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர; l
பாபோபபாதகாந் மர்த்ய: முச்யதே நாத்ரஸன்சய: ll

யோ வாரந்நிதி மல்ப பல்வலமிவோல்லங்க்ய ப்ரதாபாந்வித:
வைதேஹீகந சோக தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய: l
அக்ஷக்நோஜ்ஜித ராக்ஷஸேச்வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வாநரபுங்கவோவது ஸதாத்வஸ்மாந் ஸமீராத்மஜ: ll


 

ஓம் ஸ்ரீபவஆசு ஜெயம்
(ஸ்ரீ க்த ரப்ரஸாத ஞ்சநேய சுவாமி)

ஜெயமே ஜெயம் என்னென்று சொல்லும்
ஸ்ரீ பவஆசு ஆலயம்
ராம ஜெயம் என துடிக்கும் இதயங்கள்
வாழும் ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

தினந்தினமும் திருப்பல்லாண்டு
திவ்யமாய் பாடும் ஸ்ரீ பவஆசு ஆலயமே
தரணியில் வாழ்கவே பல்லாண்டு!

தினந்தினமும் ‘பவனஜா ஸ்துதி’ பாடும்
ஸ்ரீ பவஆசு ஆலயமே ஜானகி ராமனின்
விவாஹ வைபவமாய் வாழ்கவே பல்லாண்டு!

நாளொரு மேனியும் அலங்காரம் காட்டிடும்
பொழுதொரு வண்ணமாய் அபிஷேகம் செய்திடும்
ஸ்ரீ பவ ஆஞ்சநேயர் வசித்திடும் ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

வெற்றிப் படிகளில் கைதூக்கி ஏற்றிவிடும்
முழுமுதற் பொருளான விஜய விநாயகருடன்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

கல்லும் கலையாகும் காற்றினை மீட்டிடும்
கலைவாணி கைவிரலில் கவர்ந்திழுக்கும் வீணையுடன்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

ஐம்முக தேவியாம் காயத்ரி, லஷ்மி சத்யநாராயணன்
சிவசக்தி முருகன், நந்தி, தங்கப்பிள்ளையாருடன்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

ஒன்பதாய் சுழலும் கோள்கள் ஓரிடத்தில்
நல்லதாய் நின்றே நல்லாசி வழங்கி
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

பொங்கிடும் பாற்கடலின் ஷேஷ நாரணன் லஷ்மியுடன்
நாவியில் ப்ரம்மனும் நமசிவாயரோடும்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

மாயை நீக்கிட மிதமாய் மிதந்து வரும்
மோகன மெல்லிசையும் கண்ணனின் குழலுடன்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

சக்தியின் உருவாய் வன்னியும் வேம்பும் சிவனாய் எழுந்த
லிங்கவில்வமும், நந்தவனமும் தீர்த்தமும் சிவசக்தியாய்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

புண்ணியனாக்கும் தூய்மையின் உருவாய், தாயாய்
தழைக்கும் திருத்துழாய் நறுமணத்துடன்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!


கேட்டதைக் கேட்டதும் கைமேலே தந்திடும்
கண்ணுக்குக் கண்ணான கற்பகத் தருவுடன்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

ஆனைபோன்ற அரசும், அதனடியில் அரசன் மகனாய்
குட்டிப்பிள்ளையார் நல்நாகரோடு
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

கம்பீர உருவான கண்கண்ட காவலன் மின்னிடும்
மஞ்சள் ஆதவன், கிழக்கு நோக்கிய உற்சவருடன்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

நான் வணங்குமுன்னே எனை வணங்கி வாழ்த்தும்
பணிவான தெய்வம், குட்டி ஆஞ்சநேயருடன்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

அடியாருக்கு அருளிடும் ஆண்டவனும், அடியாரும் அடியாரான
ஆழ்வார்களும் ஆழ்பக்திநெறி அளித்திட
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

பூமகளின் வாய்மொழிகள் மார்கழியில் வலம்வர
ஸ்ரீரங்கநாதனை சேர்ந்திட்ட ஆண்டாளோடும் மார்கழியோடும்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

தர்மம் காக்கும் கடவுள் மஹாவிஷ்ணுவின்
தசாவதாரம் பத்தோடும், கருடனோடும்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

மெய்மன நோய்தீர்க்கும் மருத்துவ அவதாரம்
கைதொழ வைத்திடும் தன்வந்தரி அருளுடன்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

வேதமுதல்வனாய் பரிமுக வேந்தனாய் லஷ்மியுடன்
வந்தே அறிவை அள்ளித்தரும் ஹயக்ரீவ பெருமாளுடன்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

கல்யாண ஜானகிராமனுடன் பட்டாபிஷேக ராஜாராமன்
லஷ்மன பரதசத்ருக்ண ஆனந்த அநுமனுடன்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

ஆதிஷேஷன் மீது அழகாய் பள்ளிகொள்ளும் பிள்ளையாய்
சந்தான கண்ணனின் செவ்விதழ் புன்னகையாய்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!
தர்மங்காக்க விரைந்திடும் தர்மசக்கர மூர்த்தியும்
தூணிலும் துரும்பிலும் கலந்த தெய்வநர சிம்மனோடு
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

ஒன்றான சிரஞ்சீவி ராமஜெயமென
இருசொல் சொல்லி சீதாதேவியின்
மூன்றில் மூத்த மகனாகி, நாள்வேதமறிந்து,
நாளும் நன்மை செய்ய அவதரித்த
பஞ்சாட்சரன், ஆறடியில் கைகூப்பி கண்முன் நிற்கும்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

சீதையோடு ராமன் சீதாராமனாய்
லஷ்மணரோடு ராமன் ராமலஷ்மணராய்
அநுமனோடு ராமன் அடியான் அன்பனாய்
அரியுமரனுமாய் கலந்து நிற்கும் ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

ஆகாயம் நோக்கியே நல்லொளி வீசிடும் சன்னதி கோபுரங்கள்
புண்ணிய கலசங்கள் நிலையாய் அஸ்திவாரமுதல் கலசம்வரை
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

தங்கமான தெய்வத்திற்குத் தங்கமான சேவையாய்
தங்கமான விமானத்தில் வைத்த தங்கமான கலசத்தோடும்,
சேவகரோடும் ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

நானென்ற ஆணவம் தாங்கிவரும் எவரையும்
ராமென்று சொல்லவைத்து பணிவாய் பணிய வைக்கும்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

காலங்கள் கடந்தும் தேவமொழியாய் நிலைத்திட
தாய்மொழிபோல் வாழ்ந்திட பஞ்சபூதங்கள் காத்திட்டு
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!

ராமசேவைபோல், ராமபாணம் போல், ராமநாமம் போல், ராமதூதன் போல்
திருக்கோயில் அடிமுதல் முடிவரை சிரஞ்சீவியே, சிவரூபன் போல்
ஸ்ரீ பவஆசு ஆலயம் வாழ்கவே பல்லாண்டு!




















No comments:

Post a Comment