Featured post

The Eleventh Rudra Incarnation of Merciful Lord Siva

Friday, 11 May 2018

யார் இந்த ஆஞ்சனேயன்?

                                                                                உ

யார் இந்த ஆஞ்சனேயன்?

குரங்கென்றா நினைத்தாய் அனுமனை?
மனிதா, உன் முன்னோர்கள் யாரென்று அறிவியல் சொல்லுது?
மந்தியென்றா நினைத்தாய் அனுமனை?
மனிதா, நந்தி தொழும் செஞ்சடையன் அவதாரமல்லவா அவர்!
யசோதை மைந்தனும், அயோத்தி யுவராஜனும்
செய்த லீலைகளை அறியாதோர் உண்டோ!
மழலை பேசும் பிஞ்சுப்பிள்ளையாய் வந்த சிவனை
அடையாளம் காணாது போனீறோ?
அவனே அனுமன், அஞ்சனை பெற்ற தவப்புதல்வன்
ஸ்ரீஆஞ்சனேயன்!

No comments:

Post a Comment