உ
ஒரு எளிய பக்தரின் சமர்ப்பணம்...
ராமாயணத்தில் புண்ணிய சரிதம் சீதை தேடி அனுமன் பயணம்
சீதை தேடி அனுமன் பயணம்
இதுவே வரந்தரும் சுந்தர காண்டம்!
மாருதிக்கு வேகம் விவேகம்
வீரம் தீரம் பராக்ரமம்
பலமும் நலமும் விஸ்வரூபமும்
எந்நாளும் தரும் ராம நாமம்! (ராமாயணத்தில்)
ராமஜெயம் சொல்லி விஸ்வரூபம்
கடலைத்தாண்டும் மாருதி வீரம்
லங்கை நோக்கி அனுமன் பயணம்
அனுமன் ராம சேவைச் சிகரம்! (ராமாயணத்தில்)
கடலின் நடுவே எழுந்த பர்வதம்
உபசரித்தன்பால் அழைத்தது மைநாகம்
அனுமன் மனதில் ராம காரியம்
இளைப்பாற அங்கே இல்லை அவகாசம்! (ராமாயணத்தில்)
கடலைத் தாண்டும் ராமசேவகம்
வழியை மறித்த சுரசை மாரூபம்
அனுமனை உண்ண அவளுக்கு எண்ணம்
வாயுள் நுழைந்து வெளிவந்த விவேகம்! (ராமாயணத்தில்)
ராமஜெயமே சொல்லிடும் மாருதம்
நிழலைப் பிடித்து இழுத்த விநோதம்
அரக்கியின் கோரப் பசிக்கு ஆகாரம்
ராமஜெயம் சொல்லி சிம்ஹிகை வதம்! (ராமாயணத்தில்)
லங்கை நின்றது அனுமன் பாதம்
இடக்கையால் அடித்தது வானர வீரம்
அழிந்தது லங்கா தேவியின் ஆணவம்
ராமஜெயம் சொல்லி லங்கையுள் ப்ரவேசம்! (ராமாயணத்தில்)
சீதையைத் தேடி சுற்றிய மாருதம்
சிற்றித் திரிந்த விழிகளின் வேகம்
கண்டது அங்கே அழகிய அசோகவனம்
சீதை ஜெபித்தாள் ராம நாமம்! (ராமாயணத்தில்)
சிம்சுபா அடியில் பத்தினி தர்மம்
கிளையில் மறைந்தது ராம தூதம்
அதிரச் செய்த்தது ராவணன் க்ரோதம்
அரக்கனை மிரட்டிய சீதையின் விரதம்! (ராமாயணத்தில்)
காத்திட வேண்டும் பத்தினி விரதம்
உயிரை மாய்த்திட கொண்டாள் சித்தம்
ராம நாமம் சொன்னான் மாருதம்
தந்தது சீதைக்கு புது உயிரோட்டம்! (ராமாயணத்தில்)
கண்டாள் அனுமன் அனிமா ரூபம்
மனங்குளிரக் கண்டாள் விஸ்வரூபம்
கணையாழியில் கண்டாள் ராமரூபம்
களைந்தது அவள் சந்தேகரூபம்! (ராமாயணத்தில்)
அனுமன் பாடிய ராம சரிதம்
கரைத்தது சீதை மனதின் கலக்கம்
ராம பக்தனைக் கண்ட பாக்கியம்
ராமன் நிலையை அறிந்து ஆனந்தம்! (ராமாயணத்தில்)
சூடாமணியைப் பெற்ற சேவைக்கரம்
காகம் மனச்சிலை கதைகேட்ட மாருதம்
அரக்கரை பந்தாய் ஆடிய வீரம்
பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட விவேகம்! (ராமாயணத்தில்)
ராமன் பெருமை உரைத்த பக்திமனம்
ராவணன் தீச்செயல் தந்த பாபம்
நீங்க பற்றிடு ராமன் பாதம்
என நீதி உரைத்தான் ஆஞ்சநேயம்! (ராமாயணத்தில்)
கட்டுக்கடங்கா ராவணன் கோபம்
மதிகெட்ட அரசனின் கட்டளை அதர்மம்
தீமூட்டிய வாலானது தீப்பந்தம்
அனுமனால் நடந்தது லங்கா தகனம்! (ராமாயணத்தில்)
செய்தி வந்தது சீதையின் இருப்பிடம்
அறிந்ததும் பெருகிய தவளின் சோகம்
அக்னிதேவனிடம் அவளின் வந்தனம்
அனுமனை சுடாது இருக்க வந்தனம்! (ராமாயணத்தில்)
வியர்வையை தெளித்துவிட்டது மாருதம்
வாலை நீரில் அணைத்தது மாருதம்
வியர்வை பருகிய மகரம் ஆனந்தம்
பிறந்ததே வானர மகரத்துவஜம்! (ராமாயணத்தில்)
ராமஜெயம் சொல்லி நாளும் பராக்ரமம்
கடலைத் தாண்டி புரிந்த சாகசம்
சூடாமணியைக் காட்டிய சேவகம்
அன்போடு அணைத்தது ராமன் நெஞ்சம்! (ராமாயணத்தில்)
சூடாமணியில் சீதையின் வதனம்
ராமன் இன்றி வாடும் வதனம்
அனுமன் மூலம் அறிந்த சோகம்
தீர்த்திட எழுந்தது ராம பாலம்! (ராமாயணத்தில்)
நட்பும் பாசமும் உடன்நின்ற கோலம்
வானர சேனை செய்த தியாகம்
தசக்ரீவனை அழித்தது ராம பானம்
தர்மம் காக்க ஒரு மகாயுத்தம்! (ராமாயணத்தில்)
சீதா ராமனின் ஆனந்த கோலம்
அயோத்தி சென்று பட்டாபிசேகம்
ராமன் சரணத்தில் எல்லாமும் நலம்
ராமபக்தன் சரணத்தில் எல்லாமும் நலம்! (ராமாயணத்தில்)
ராமஜெயமே ஸ்ரீராமஜெயமே
ராமனுக்கே ஜெயம், ராமனுக்கே ஜெயம்!
ராமஜெயமே ஸ்ரீராமஜெயமே
ராமனுக்கே ஜெயம், ராமனுக்கே ஜெயம்!
any queries/issues, kindly comment

No comments:
Post a Comment